கல்வெட்டுகள் சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியலை படம்பிடித்து காட்டும் கண்ணாடி ஆகும் என்று கல்வெட்டு கிருஷ்ணமூர்த்தி பேசினார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வந்தவாசியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற திண்ணை இலக்கிய நிகழ்ச்சியில், அவர் பேசியது:2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் கூட்டான வாழ்க்கை வாழ்ந்திருப்பதையும், பண்பாடு உள்ளவர்களாக வாழ்ந்திருப்பதையும் வரலாறுகளும், கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. மலைக் குகைகளில் வாழ்ந்து வானியல் நிகழ்வுகளை உலக நடப்புகளை உணர்ந்தவர்களாக வாழ்ந்திருப்பதையும் அறிய முடிகிறது.மன்னர்கள் ஆண்ட வரலாற்றை கல்வெட்டுகளில் நாம் காண முடிகிறது.
இந்தியாவில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் உள்ளன. இதில், தென்னிந்தியாவில் மட்டும் 80 ஆயிரம் கல்வெட்டுகளும், தமிழகத்தில் மட்டும் 30 ஆயிரம் கல்வெட்டுகளும் உள்ளன. கல்வெட்டுகள் மனித குலத்தின், பழமையின் நிலைக்கண்ணாடி என்றால் அது மிகையல்ல. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த மரபு, சிந்தனை, கலை, இயற்கை முறை, ஆட்சி, ஆதிக்கம் உள்ளிட்டவை கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.கரிகாலன் காட்டை அழித்து நாட்டை உருவாக்கியது முதல் நிலம், நீர்ப்பாசனம், கோயிலுக்கான சொத்து வரை பல்வேறு விவரங்களை கல்வெட்டுகள் மூலம் உணர முடிகிறது. நம் பண்பாட்டின் மிச்சத்தை கல்வெட்டுகளில் காணமுடியும். பண்பாட்டை கண்டுபிடிக்க இலக்கியமும், கல்வெட்டுகளும்தான் இன்றளவும் இரு கண்களாக உள்ளன. பழங்கால நாகரீகத்தின் முகமாக கல்வெட்டுகள் திகழ்கின்றன என்றார்.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் கிளை துணைத் தலைவர் இரா.சிவக்குமார் தலைமை வகித்தார். கிளைச் செயலர் பூங்குயில் சிவகுமார் வரவேற்றார்.புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து தெள்ளாறு வே.சிவராமன், பாரதிதாசன் கவிதைகள் குறித்து முனைவர் ம.மகாலட்சுமி ஆகியோர் பேசினர். டாக்டர் எஸ்.பிரபு, மாவட்டச் செயலர் ஆரிசன், மாவட்ட பொருளாளர் அ.அண்ணாமலை, ஆசியன் மெடிக்கல் அகாடமி இயக்குனர் பி.ரகமத்துல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நன்றி தினமணி
http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Vellore&artid=412437&SectionID=140&MainSectionID=140&SEO=&Title=%22%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87

No comments:
Post a Comment