Tuesday, June 14, 2011

செஞ்சி ஊரணித்தாங்கல் மலையில் சமணப்படுக்கைகளை தொல்லியல் நிபுணர் ஆய்வு

செஞ்சியை அடுத்த ஊரணித்தாங்கல் மலையில் சமணப்படுக்கைகள் உள்ளன. தொல்லியல் ஆய்வாளர் அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி செஞ்சி பகுதிக்கு வந்து சமணப்படுக் கைகளை ஆய்வு செய்தார்.
ஊரணித்தாங்கல் மலையில் உள்ள சமணப்படுக்கைகள் குறித்து அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
சமணதுறவிகள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சபூதங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அதற்கான வசதிகளை அவர்களுக்கு அந்த கால மன்னர்கள் செய்து கொடுத்தனர். அதன்படிதான் சமணபடுக்கைகள் உருவாகின.
இந்த சமணப் படுக்கைகளில் ஜைன முனிவர்கள் வந்து தங்கியிருந்துள்ளனர். அதற்கு ஆதாரமாக 1976-ம் ஆண்டில் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டு உள்ளது. ஜைன முனிவர்களான வர்த்தமர்சாகர், ஸ்ரீ 108 ஆச்சார்ய நிர்மல்சாகர், மகாராஜி, ஸ்ரீசாந்திசாகர் ஆகியோர் இந்த பகுதியில் உள்ள சமணப்படுக்கைகளில் தங்கியுள்ளனர். அவர்கள் செஞ்சி பகுதிக்கு நடந்து வந்தபோது, நிர்வாணமாக செல்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றார்.

http://www.maalaimalar.com/2010/12/29225308/villupuram-district-news.html

நன்றி மாலைமலர்

No comments: