Wednesday, June 15, 2011

The rock art of Tamil Nadu

A RECENT issue of Kalvettu, the journal of the Department of Archaeology, Government of Tamil Nadu, provided me the first list I'd seen of the monuments in the State protected by the Department. And they numbered only 87! And if to them you add the monuments in Tamil Nadu protected by Archaeological Survey of India - whose list I have not seen, but which is unlikely to include more than a few score monuments - the State then has less than 200 protected historic monuments. And for a State that proudly proclaims a heritage over 2000 years old and great kingdoms, not to mention other ruling powers, every couple of hundred years, less than 200 protected monuments seem an inordinately small number. Which is why we need a Heritage Act for Tamil Nadu sooner rather than later - but, as things stand, heritage does not appear a priority, with little attempt to protect what is already declared protected and even less attempt to capitalise on the opportunities the protected offer.

The State Department of Archaeology's list appears to have stirred up little interest in the media in the State, but whether it was the list, or otherwise, one national magazine, Outlook, recently drew attention - mine included - to some protected sites in Tamil Nadu that very few in the State are likely to have even heard of. Yet, places like Chettavarai, Alampadi and Kilvalai in Villupuram District are so rich in prehistoric rock paintings that the experts speak of them in the same breath as Bhimbetka in Orissa, which is an UNESCO world heritage-nominated site and draw not only for scholars but also tourists. Yet Tamil Nadu has 50 more such sites, with paintings as well as engravings or etchings, protected and unprotected, and certainly not exploited. Even more certainly, they endangered by granite quarries, local vandals and political artists.

The State Department of Archaeology dates the Kilvalai paintings to 1000 B.C. Chettavarai's and Alampadi's paintings are believed to be even older. Yet another protected site is at Vettaikkaranmalai, near Narasimapuram, in Coimbatore District. And there are several other sites of various ages in Dharmapuri, Dindigul and Tirunelveli Districts. A recent find by ROOTS, a Madras-based NGO, comprising artists, art historians and archaeologists, headed by Prof. G. Chandrasekaran of the Government College of Fine Arts, Madras, has been at Porivarai, near Karikkiyur, in Erode District. It is reported to be by far the largest rock `canvas' found in Tamil Nadu, measuring 120 feet by 15 feet, and is described by Chandrasekaran in the report as "breathtaking".

Such prehistoric wealth deserves a better deal than the occasional signboard and the even less frequent fencing. Not only do these sites need to be properly protected and conserved, but they need to be made better-known and more tourist-friendly - but ensuring at the same time, through significant entrance fees - that will help pay for their conservation - that only those genuinely interested have access to what, from all accounts, is quite a treasure.



courtesy THE HINDU


Paintings of Prehistoric Man in South India

Art has no particular history of its origin. Since the prehistoric days, man had been painting in stones and rocks. Earlier, man was entirely dependent on stones and so they used to settle down in places where the stones can be found nearby. Thus, the beautiful paintings of that period can be found only in those stones and engravings on rocks and caves.

Bhimbetka rock PaintingThese prehistoric paintings found in the rocks reveal the engravings of animals, birds, human figures, hunting scenes and geometric designs. The Bhimbhetka in Madhya Pradesh is well known for its prehistoric rock art. The Benekal forest, Maski and Koppgallu in Karnataka and Porivarai (near Karikaiyur) and Kilvalai in Tamil Nadu are the places of South India where prehistoric rock art can be seen. Porivarai situated in the Nilgiris hills of Tamil Nadu district is popular among all the prehistoric rock art found in South India. Porivarai is placed in a deep jungle crowded with wildlife. One of the largest prehistoric paintings of South Asia is the rock painting found here in Porivarai. The theme of the painting consists of hunting scenes and dancing scenes.

These prehistoric arts of South India later influenced the art of later periods. For example, the human figures seen on the rocks at Benekal forest, Maski, Koppgallu in Karnataka and Porivarai in Tamil Nadu and a few other sites are have a remarkable similarity with human figures on the karshapanas or punch-marked coins that were used as money in India approximately from 600 B.C. to 100 A.D.

Most of these rock-art samples and coins have shown the human body in the `S` twists form. These also represent dynamism of action. The archaic Ujjain symbol seen at Porivarai represents a four-armed symbol. It has some similarity with the same type of symbol seen on the `Karsbapanas`. The same happens with the animal paintings in Porivarai. These animals are mostly shown in profile as on many of the karsbapanas.

Again, some of the bulls embodied on the rocks at Koppgallu have stylistic resemblance with the bulls on the karsbapanas.

Many other art-motifs and symbols comprising the `Nandipada` and various geometric designs are common to both, the rock-art, mainly paintings found at sites like Kilvalai in Tamil Nadu, and the punch-marked coins. The prehistoric paintings and rock arts are now situated mostly in remote areas, deep into the forest. Therefore, these sites are not known by the common people and they do not attract the tourists also for the same reason.

தமிழன் ஓவிய கலை

ஆதி மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பியபோது அவன் வாழ்ந்த இடத்தில் சூழ்ந்திருந்த கற்பாறைகளில் கோடுகளால் வெளிப்படுத்தினான். அந்தக் கற்பாறைக் கோடுகளே ஆதி ஒவியமாக அறியப்படுகின்றன.
புள்ளியில் தொடங்கிய கோடுகள் நீண்டு, வளைந்து, நெளிந்து, பல உருவக் கோடுகளாய்ப் பரவி அவர்களது வாழ்க்கை மகிழ்வுகளையும் ஆடல்பாடல்களையும் வேட்டைக்குப் பயன்படுத்திய கருவிகளையும் ஓவியக் கோடுகளாகத் தீட்டி இருக்கிறார்கள். இக்கோடுகளே வரலாற்றைப் பதிவு செய்யும் சாட்சியங்களாக விளங்குகின்றன.
ancient art
உலக நாகரிகத்தின் முதன்மையானது என்று குறிப்பிடப்படும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகம் முதற்கொண்டு இன்றைய கணினிக் காலம் வரை கோடுகளே முதன்மை பெற்று வருகின்றன. சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களாக ஏராளமான சுடுமண் சிற்பங்கள் முத்திரைகளாகப் கிடைக்கப் பெற்றுள்ளன.
கற்பனைத் திறத்திற்கு ஏற்ப உருவங்களை உருவாக்கி இருக்கின்றார்கள். இரண்டு கொம்புகளே உடைய மனிதன், மீன், எருது, வரிக்கோடுகளையுடைய புலி, மரம், காண்டாமிருகம், எருமை, காளை, யானை, உடைந்த பானைகள், பிறப்பு பற்றிய முத்திரைகள் கிடைத்துள்ளன. இச்சின்னங்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.
உலகத்தின் பல்வேறு இடங்களில் குகை ஓவியங்கள் காணப்படுகின்றன. ஏடறியா வரலாற்றுக்கு முந்தையக் காலக் கோட்டோவியங்கள் தமிழகத்தில் ஏராளமாகக் காணப்படுகின்றன. இக்கோடுகளில் ஆதித்தமிழர்களின் வாழ்நிலை சித்தரிக்கப்பட்டுள்ளது. குகை ஒவியங்கள் பெரும்பாலும் நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, வட ஆர்க்காடு, தென்னார்க்காடு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.
தருமபுரி மாவட்டம் மல்லப்பாடியில் உள்ள பாறை ஓவியத்தில் குதிரை மீது அமர்ந்த ஒரு வீரன் காணப்படுகின்றான். இவ்வோவியம் வெண்ணிறக் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது.
தென்னார்க்காடு மாவட்டம் கீழ்வாலை என்ற ஊரில் உள்ள இரட்டைப்பாறையில் செம்மண் வண்ணத்தினால் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் பறவையின் முக அமைப்புடைய மனிதர்கள் காணப்படுகிறார்கள். இவ்வோவியம் மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கணக்கிடுகிறார்கள்.
சேத்தவாரை என்ற இடத்தில் எழில்மிக்க மான் உருவ ஓவியம் காணப்படுகின்றது. ஐயனார் மலையில் எருமை, கரடி, புலி, மீன் போன்ற உருவங்கள் செம்மண் நிற ஓவியக் கோடுகளால் வரையப்பட்டுள்ளன. உள் பகுதிகளில் வெண்மை நிறம் பூசப்பட்டுள்ளன. இவ்வோவியங்களில் ஒரே ஒரு மனித உருவம் காணப்படுகின்றது. இவை கீழ்வாலை ஓவியத்தை ஒத்திருப்பதாகக் கலையியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கோயம்புத்தூரில் வெள்ளெருக்கம்பாளையம் அருகில் உள்ள வேட்டைக்காரன் மலையில் உள்ள ஓவியங்களில் யானையும், குதிரையும், மனிதர்களும் காணப்படுகின்றன. ஆறு மனித உருவங்கள் கைகோர்த்து நடனமாடுவது போல் காணப்படுகின்றன. யானை, குதிரை ஆகிய விலங்குகளில் மனிதர்கள் அமர்ந்திருப்பது போன்ற ஓவியங்களும் காணப்படுகின்றன. இவையொத்த ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாசினாக்குடியில் காணப்படுகின்றன. மனிதர்கள் யானையில், புலியில், மானில், மயிலில் அமர்ந்த நிலையில் உள்ளனர். இவர்கள் கடவுளர்கள் என்று நம்பப்படுகின்றனர். இவ்வோவியங்கள் 2300 ஆண்டு வகையைச் சேர்ந்தவகையாகும். இவை போல் ஆலம்பாடி, பதியாண்டாள், கொல்லூர், மல்லசமுத்திரம் போன்ற இடங்களிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன.
கிருஷ்ணகிரி மல்ல சமுத்திரத்தில் உள்ள ஓவியங்கள் வெள்ளை நிறக் கோடுகளால் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு விலங்கு வியக்கும் வண்ணம் காணப்படுகின்றது. மனிதனின் தலையில் அலங்கரிக்கப்பட்ட சிறப்பான தலைப்பாகை காணப்படுகின்றது. சமூக வாழ்க்கையில் தலைவன் ஏற்றுக் கொண்ட நிலையை ஏற்றுக் கொண்டது போல் தெரிகிறது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக் குகை ஓவியங்கள் பெரும்பாலும் வெண்ணிறக் கோட்டோவியங்களாகவே காணப்படுகின்றன. இவ்வோவியங்களில் அலங்கரிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் அரசனும், இளவரசனும் வீற்றிருக்க அருகில் ஆயுதம் ஏந்திய வீரர்களும் காணப்படுகிறார்கள். இவை சமுதாய வாழ்க்கையில் அரசு உருவான காலத்தைப் எதிரொளிப்பதாக இருக்கலாம்.
திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள குடியம் என்ற ஊரில் உள்ள குகையில் காணப்படும் கோடுகள் மிக மிகத் தொன்மையானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இன்னும் ஏராளமான குகைகளில் நமது முன்னோர்களின் கலைப்படைப்புகள் மறைந்திருக்கலாம். ஆய்வாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் நமது வரலாறு மேலும் விரிவடைய வாய்ப்புண்டு. இருக்கும் ஓவியங்களும் நம் மக்களால் பாதுகாக்கப்படாமல் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
ஓவியக் கோடுகளை நம் கலைஞர்கள் பல்வேறு ஊடகங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், முத்திரைகள், உலோகத்திலும், சுடு மண்ணிலும் காணப்படுகின்றன. இவை கோட்டு வடிவங்களாகவும், புடைப்பு அச்சு முறையிலும் அமைந்ததாகவும் காணப்படுகின்றன. அரசர்களின் கொடி, அவர்கள் வணங்கிய கடவுளர்கள், அவரவர் சின்னங்கள் ஆகியவற்றையும் கோடுகளால் வரைந்திருக்கிறார்கள். செப்புத் தகடுகளில், ஓலைச் சுவடிகளில் ஓவியக் கோடுகளோடு எழுத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
வரலாற்றை, மருத்துவத்தை, புராணத்தை, இலக்கியங்களை ஓவியத்தோடு படைத்திருக்கிறார்கள். காதல் மங்கையரின் மார்பகங்களிலும், முதுகுகளிலும், செம்பஞ்சுக் குழவையால் ஓவியம் வரைந்ததைத் தொய்யில் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
பெண்கள் தங்கள் வீட்டின் முன்வாசலில் சுவரில், தெருக்களில் கோலங்கள் போட்டுள்ளனர். தம் கற்பனைகளில் மிதந்து வரும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், பூக்கள் என்று தம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் ஆயிரம் ஆயிரம் கோடுகளால் வெளிப்படுத்தியுள்ளனர்.
திரைச்சிலைகளில் முதலில் கோடுகள் போட்டு அதன் தன்மை குலையாமல் வண்ணங்கள் தீட்டும் கலையை நம் முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள்.

"ஒருமுக எழினியும், பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு
ஓவிய விதானத் துரைபெறு நித்திலத்து
மாலை தாமம் வளையுடன் நாற்றி"

என்ற சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதை வரிகளால் அறியலாம்.
தோலைப்பதப்படுத்தி அதில் ஓவியக் கோடுகளை வரைந்து உள்பகுதியில் வண்ணங்கள் குழைத்துத் தீட்டி தோல்பாவை மூலம் மக்களுக்குக் "கதை சொல்லிகளாக" வாழ்ந்து கலையை வளர்த்திருக்கிறார்கள்.

இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா
மரப்பாவை சென்று வந்தற்று

என்ற திருக்குறள் அடிகளில் மரப்பாவை பயிற்று வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். "கை புனைந்து இயற்றாக் கவின்பெறுவனப்பு" என்று சங்க இலக்கியம் குறிக்கின்றது. "கண்ணுள் வினைஞர்" என்று ஓவியர்களை பழம்பெரும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஓவியத்தை "ஓவம்" என்கிறார்கள். மணிமேகலையில் "ஓவியச் செந்நூல் உரைநூல் கிடைக்கையும்" என்று வருகிறது.
நடுகல் வழிபாடு என்பது ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரை நீண்ட வரலாறு கொண்டதாகும். கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் 10-ஆம் நூற்றாண்டு வரையில் ஏராளமான நடுகற்கள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பல்லவர் காலமாகும்.
போரில் வீர மரணம் அடைந்தோரின் கற்களின் மேற்புறத்தில் செதுக்குச் சிற்பமாகவும், கோட்டுச் சிற்பமாகவும் வடித்துள்ளார்கள். வீரர்களின் பெயர் மற்றும் நிகழ்வுகளை எழுத்தில் பதிவு செய்துள்ளார்கள். பின்னாளில் இதுவே குல தெய்வ வழிபாடாகவும் மாற்றம் பெற்றுள்ளது. தஞ்சை மாவட்டம் குடந்தை அருகே கி.பி. 884 திரும்புறம்பியப் போரில் மாண்ட போர் வீரர்களின் நினைவாகப் "பள்ளிப் படை வீடு" என்ற நடுகல் கோவில் உள்ளது. இதைக் கல்வெட்டு ஆய்வறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தார் பதிவு செய்துள்ளார்.
நடுகல் செதுக்குச் சிற்பங்கள் இலக்கணங்களை மீறிப் கோட்டோவியங்கள் சிறப்பாக்கப்பட்டுப் பக்க வாட்டில் உருவங்கள் அகழ் ஓவியக் கோடுகளாகவும் வெளிப்படுகின்றன. நடுகற்களே முப்பரிமாண வடிவங்களுக்கு முன்னோடி எனலாம்.
கோடுகள், ஓவியங்கள், செப்புத் தகடுகள், அச்சுகள், துணிகள், கற்கள், உடல்கள், வீட்டு வாசல்கள் என்று பல்வேறு தளங்களில் இருந்த கோடுகளும் ஓவியங்களும் பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், மராட்டியர் காலம் என்று காலங்கள் தோறும் விரிவுபடுத்தப்பட்டு வந்தன.
சோழர்கால ஓவியங்கள் கி.பி. ஆயிரத்தைச் சேர்ந்தவை. இவ்வோவியங்கள் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் கருவறை முதல் தளச் சுற்றுச் சுவரில் பாதுகாப்பாக வரையப் பட்டுள்ளன. இவற்றின் ஓவியக் கலையின் மேன்மை தெரிவதோடு அஜந்தா ஓவியத்தின் சாயலோடு இவை ஒத்துப் போகின்றன. இவை இன்னும் அழியாமல் இருப்பதற்கு FRESCO என்னும் சுவர் ஓவிய முறையில் வரையப்பட்டதும் ஒரு காரணமாகும். ராசராச சோழன், கருவூரார், நடன மகளிர், வீரர்கள், நடனமாடும் இசைக்கலைஞர்கள், சிவபூத கணங்கள் ஆகியவை வரையப்பட்டுள்ளன. இவையெல்லாம் கவர்ச்சியான பல வண்ணங்களோடு கோடுகளால் சிறப்பான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
ஒன்பதாம் நூற்றாண்டு ஓவியங்களாகப் பாண்டியர் காலச் சித்தன்னவாசல் ஓவியங்கள் திகழ்கின்றன. பனைமலை, காஞ்சிக் கைலாசநாதர் கோவில் ஓவியங்களையும் இவற்றோடு குறிப்பிட வேண்டும்.
சித்தன்னவாசல் ஓவியங்களில் அரசர், அரசி, மீன்கள், வாத்துகள், எருமைகள், நிறைந்த தாமரைக்குளம் ஆகியவை பாண்டியர் கால ஓவியக் கலைஞர்களின் கைத் திறமைக்குச் சான்றாக உள்ளன.
17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நாயக்கர் கால ஓவியங்கள் தமிழகம் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன.
காஞ்சி திருப்பருத்திக்குன்றம், திருவாரூர் கோவில், சிதம்பரம் கோவில், குடந்தை பட்டீஸ்வரம், திருமங்கலக்குடி, தஞ்சை, மதுரை, அழகர்கோவில், திருவலஞ்சுழி என எல்லாக் கோவில்களிலும் ஓவியங்கள் நிறைந்து காணப்பட்டன.
திருவலஞ்சுழி, பட்டீசுவரம், திருமங்கலக்குடி ஆகிய இடங்களிலுள்ள ஓவியங்களைச் குடமுழுக்கு என்ற பெயரால் அழித்து விட்டார்கள்.
திருவாரூர் நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஓவியங்கள் கேட்பாரற்று வவ்வால் எச்சத்தாலும் மழையின் ஒழுகலாலும் அழிந்து கொண்டிருக்கின்றன.
திருவிடை மருதூர்க் கோவிலில் வரைந்திருந்த ஓவியங்கள் ஏராளம். "சித்திரபிரகாரம்" என்ற சுற்றுப் பாதையில் தற்போது எல்லாம் மறைக்கப்பட்டுத் தமிழன் காண்பதற்கும் கற்பதற்கும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள்.
தமிழனுக்கு என்று இருந்த ஓவியக் கலை வரலாற்றை எழுதுவதை விட, அதைக் காப்பதற்கான முயற்சிதான் இன்று மிக இன்றியமையாத் தேவையாகும். அதைச் செய்வதற்கான வல்லமை தமிழர்களுக்கு என்று வருமோ?

கீழ்வாலை பாறை ஓவியங்கள்

கீழ்வாலை என்னும் இடத்தில் (விழுப்புரம் மாவட்டம்) விலங்கு முக மனிதஓவியங்கள் கிடைத்துள்ளன. ஓர் ஓவியத்தில் குதிரையின் மீது ஒரு மனிதன்அமர்ந்திருக்க, அக்குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து ஒருவர் அழைத்துச்செல்வது போல அமைந்துள்ளது. இதனருகே மற்றுமோர் உருவமும்காணப்படுகிறது. இந்த மூன்று மனிதர்களது முகங்களும் விலங்கின்முகங்களாக அமைந்துள்ளன.

விலங்கு போன்று வேடம் அணிந்து ஆடுதல்என்னும் வேட்டைச் சடங்குகளைப்பிரதிபலிக்கும் ஓவியங்களாக இவற்றைக்கருதலாம்.
குதிரையின் மீது மனிதன் - கீழ்வாலை

அடுத்ததாகப் படகு ஒன்றில் நான்கு மனிதர்கள் செல்வது போன்ற ஓவியம்காணப்படுகிறது. இதில் நான்கு மனிதர்களது முகங்களும் பறவைமுகங்களாகவே காணப்படுகின்றன.

கீழ்வாலையில் காணப்படும் மனித உருவங்களில் ஓர் உருவம் மட்டும்பெரியதாக உள்ளது; அம்மனிதனின் நீண்ட தலைமுடி இரு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. இது அவ்வுருவத்திற்குரிய சிறப்பைச்சுட்டுவதாக அமைகிறது. அவ்வுருவத்தை அக்குழுவின் தலைவன் என்றோஅல்லது முன்னோரது நினைவுச் சின்னம் என்றோ கருதலாம்.

Ancient Tamil Writing and drawing in Clay Tablets

From the banks of River Noyyalaaru processed (burnt) clay tablets were excavated from 1998 onwards. Invariably every tablet contained ancient tamil writings on one side and drawings on the otherside. Terracota figurines, earthern pots and black stone statues obtained from the excavation site contained the same theme (writings, drawing). For the first time in Tamilnadu such materials are available reminding excavations in Harappa. Other than these sites, similar materials of antiquity have not been excavated from any other parts of India. So far unrecorded words were scribed on red and black walls from the exacavation site and on the tablets.

Kadan from the land of kumiz uur ('erumi naadu kuzumuur kaadan') is written on these tablets in many different ways. In some places 'kadan' is replaced by 'nagan'. In these sentences the alphabets 'ta' and 'ma' are written in either Tamil brahmi or in Asoka Brahmi. The tablets talk about 'gold trade'. Amidst still unknown characters one could see such names like 'mazan' 'maza ananman' 'ceyanagadan'.

A few scripts in those tablets belong to a really ancient time but some belong to a later time. For example, the 'du' in 'naadu' is written as 'S' and as 'G' . If we consider the 'S' as 'round letters' (vatta ezuthu) then we could guess that these tablets were written during 4th century A.D. What is still unclear about these tablets is whether they are true alphabets or are they symbols? Same words or symbols are written in all the tablets like a 'mandra'. Could that be a ritualistic practice? or a product of a school where students practiced dictation on clay tablets?

The tablets come in all shapes, long square, rectangle, round, semi-circle, semi-rectangle and shape like a fish. The edges are designed in a way resembling the scale of a snake. On one side ancient writings and on the other side marine organisms such as fish, snail, turtle are drawn. For example, in one of the tablets there is a drawing of a big fish below which a mollusc. In another a ship with three sails and two anchors is drawn. It is hard to find a reason why the tablets are in different shapes. Probably, they are weights of a balance or seals. On the backside one could see drawings of mountain, river, moon, sun, snake, plants, boat etc. along with words or symbols. Some drawings could be maps. In such drawings letters like a.mi.ru.e.naa.du...are given in small boxes. The meaning is still unclear. A separate research on these symbols are needed. For example, some letters are bigger than the others and written stylistically. We still don't know whether they are signature of a chieftain or a symbolic representation of something else?

Drawings of a five-headed serpent is seen on the tablets, figurines and on stone statues. In one of the tablets a coiled serpent with its head spread out carrying the word 'nagan' is seen. In that drawing, above the body of the serpent is seen a small cottage. One could guess that snake with all its sybolic meaning is associated.

Some tablets contain the sentence 'nadan of the land of kumuzuur'. PuRanaanuuru (49) an ancient sangam period (300 BC - 400 AD) poetry anthology describes the head of kurunji and mullai (ancient landscapes of tamilnadu) as 'nadan'. So these tablets could have been written as a memento when their favourite hero died. This may not necessarily be an official memento instead sentimental tribute from the people of the land on the memory of their chieftain. The mementos being in readily available clay material and in metal plates vouch that.

It is still not uncommon in rural Tamilnadu to offer earthly figures of horse and elephant to village deity such as Iyanar. Ancestral worship along with worshiping people of great bravery are common in Tamilnadu. In ancient tamil 'kadan' means the divine spirit that rests in a particular landscape. So it is possible that these tablets are offerings to god. In a Dharmapuri 'nadukal' (a stone offering) a word 'kattiRaikaL' meaning 'god of the forest' is mentioned. This could be an evidence for such a line of thinking. 'eruminadu kumizuur kadan' is written in various antic materials collected in that area such as in earthen pots and in stones. Interestingly, the word 'erumi naadu' and 'kuzumuur' are scribed in Tamil brahmi at Chittannavasal as well. Eruminaadu could mean the state of Mysore.


These tablets were originally discovered by Mr.I.Ramasamy of Polampatti and Mr.Karuppasamy of Perur and given to the Department of Archeology, Tamilnadu for further inspection.

The article explaining this excavation on the side is written on the basis of a lecture delivered by Mr.R.Poongundran of Registrar Office, Department of Archeology, Trichi, Tamilnadu on 'Updates on Kongu archeology' at a two day seminar in the Santhalinga Swamigal Tamil College, Perur, Tamilnadu.

சங்கத் தகடு

தமிழர் தொன்மை பற்றிய சான்றுகள் தமிழகமெங்கிலும், பிற நாடுகளிலும் இருக்கின்றன. அவை முறையாக ஆராயப்பட்டு ஆவணப் படுத்தப் படாமல் பெரும்பாலும் வாய்ச் சொல்லாக, கர்ண பரம்பரை (செவி வழிக்) கதைகளாக உள்ளன. இந்தியாவைப் பொருத்த மட்டில் இந்தியத் தொல்பொருள் ஆவணங்கள் மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறைகளுக்குள் பங்கு போடப் பட்டு கூட்டு முயற்சியின்றிக் கிடக்கிறது. தமிழகத் தொல்பொருள் ஆய்வாளர்களின் கருத்துக்கள் பெரும்பாலும் டெல்லி மத்திய மன்றத்தில் கூர்மையாகக் கேட்கப் படுவதில்லை. உதாரணமாக, கல்வெட்டுக்களை எடுத்துக் கொண்டால் தமிழகத்திலும், பிற திராவிட தேசங்களிலுமுள்ள ஆவணங்களே அதிகம். இது காலத்தால் முற்பட்டதும் கூட. ஆயின், அசோகன் காலத்துக் கல்வெட்டே காலத்தால் முந்தியது போன்று மத்திய அரசு எழுதும் சரித்திரம் காட்டுகிறது. பிராமி என்றழைக்கப்படும் வரி வடிவு போல், அதற்குப் பழமையாக 'தமிழி' வரி வடிவம் தமிழ் மண்ணில் இருந்தது என்று தமிழக தொல்லியலாளர்கள் காட்டுகின்றனர். இருந்தும் அக்குரல் தென்னகத்தோடு அடங்கிவிடுகிறது.

இம்மாதிரியான சூழலில் கோயம்பத்தூர் மாவட்டத்திலுள்ள பேரூருக்கு அருகே பழங்காலத்து சுட்ட ஓடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வோடுகளின் ஒரு புறம் எழுதப்பட்டும், மறுபுறம் ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. இதிலுள்ள எழுத்து இன்ன வகையைச் சேர்ந்ததென்றும், அதன் முழுப் பொருள் என்னவென்றும் இன்னும் முற்றாக ஆராயப்படவில்லை. ஆயின் கல்வெட்டு ஆய்வாளர்களின் கணிப்பு இது சங்க காலத்தைச் சேர்ந்ததோ, அதற்கு முந்தியதோவாக இருக்கவேண்டும் என்பது. இதில் மிக சுவாரசியமான விஷயம் என்னவெனில், இம்மாதிரிக் களி மண் தகடுகளில் எழுதி அதை எரியூட்டி சுட வைப்பது என்பது இந்திய உப கண்டத்தில் இதற்கு முன் மொகஞ்சதோரா, ஹரப்பாவில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேறு இந்திய மொழிகளில் இம்மாதிரித் தகடுகள் இதுவரை கண்டு பிடிக்கப் படவில்லை. சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகமாக இருக்க வாய்ப்புள்ளது என்று ஒரு சாரார் சொல்லுகின்றனர். சங்கத்தகடுகளில் உள்ள எழுத்துக்களுக்கும் சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் தொடர்பு இருப்பதாக தமிழகத் தொல்லியலாளர்கள் அபிப்பிராயப் படுகின்றனர்.

இதுவரை கல்வெட்டு நிபுணர்களால் சங்கத்தகடுகளிலிருந்து வாசிக்க முடிந்தது...
'எருமி நாடு, குமிழ் ஊர் பிறந்த' என்ற வாசகம்தான். இவ்வாசகம்கூட, சித்தன்னவாசல் சமணப் படுகையில் புரிந்து கொள்ளக்கூடிய வரிவடிவில் எழுதிவைக்கப்பட்ட ஒரு வாசகத்திலிருந்து பெறப்படுகிறது. அவ்வாசகமாவது, "எருமி நாடு, குமிழ் ஊர் பிறந்த காவுடி ஈ தேன்கு சிறுபேர்சில் இளயர் செய்த ஆய் சயன அதிட்சுனம்" என்பது. இவ்வாசகப் பயிற்சியிலிருந்து பெறப்பட்டதே சங்கத்தகடுகளிலுள்ள வாசகம். ஆயின் இது போன்று முழுமையாக வாசிக்க முடியாத வண்ணம் இதுவரை அறியப்படாத வரிவடிவில் பிற வாசகங்கள் இருப்பதாகத் தொல்லியல் நிபுணர்கள் சொல்கின்றனர். ஆயின் இவ்வாசகம் ஏறக்குறைய எல்லா ஓடுகளிலும் உள்ளது. எனவே இவ்வோடுகள் ஏதாவதொரு சமணப் பள்ளியில் பயிற்சிக்காகக் கொடுத்து எழுதப்பட்ட ஓடுகளாக இருக்கலாம்.

இவ்வோடுகள் ஒரு சிமெண்ட் தொழிற்சாலைக் கட்டுமானத்தில் ஏதேச்சையாக கிடைக்கப் பெற்றதாலும், முறையாக அகழ்வாராய்ச்சியின் மூலமாக கிடைக்கப் பெறாததாலும் இவ்வோடுகளின் காலம் இன்னும் சரியாக கணிக்கப் படாமலே உள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் கரியத் தேதியிடும் முறையில் (carbon dating) இவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுவரை, இந்திய சரித்திரத்தின் மற்றுமொரு புதிராகவே இது இருக்கும்.

இவ்வோடுகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் கோட்டு ஓவிய வகையைச் சார்ந்தவை. இவற்றிற்குப் பொருள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஆனால் ஒரு ஓட்டில் தெளிவாக ஒரு கப்பலும், இரண்டு நங்கூரங்களும் வரையப்பட்டுள்ளன. மலை, நிலா, சூரியன், நாகம் போன்ற உருவங்கள் தெளிவாக உள்ளன. சில ஓவியங்கள் துறைமுகத்திற்கான வரைபடம் போலுள்ளது. கொங்கு நாட்டுற்கு அருகில்தான் சங்ககாலத் துறைமுகங்கள் இருந்திருக்கின்றன. ஒரு சிலர் இது ஒரு வகையான வேண்டுதல் வரி வடிவங்கள் என்று சொல்கின்றனர். யந்திரங்களின் முன்வடிவங்களாகக் கூட இவை இருக்க வாய்ப்புண்டு.

“பழமொழிகளில் தன்முன்னேற்றச் சிந்தனைகள்“

முன்னோர்கள் தங்களது வாழ்வில் கண்டுணர்ந்த அனுபவமொழிகளே பழமொழிகளாகும். இப்பழமொழிகள் வாழ்க்கைக்குப் பயனுள்ள பலகருத்துக்களை வழங்கும் வாழ்வியல் பெட்டகமாகத் திகழ்கின்றன. மனச்சோர்வு ஏற்படுகின்றபோது ஆறுதல் சொல்லும் தோழனாகவும், வாழ்க்கையினை முன்னேற்றும் ஏணிகளாகவும் இப்பழமொழிகள் திகழ்கின்றன.

முயற்சி

இன்று அனைவரும் கூறும் முதல் அறிவுரை முயற்சியே. இம்முயற்சி இன்றேல் உலக இயக்கம் இல்லை எனலாம். மேலும் இன்றைய எந்திர உலகில் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்வதே அருகி வருகின்றதை நாம்பலவிடங்களிலும் காணலாம். ஒவ்வொருவருக்கும் மனதுக்குள் பலகவலைகள், பலப்பல எண்ணோட்டங்கள் உண்டு. பலருக்குத் தன்னடன் ஒரேவீட்டில் வசிப்பவர்களுடன் கூடப் பேசுவதற்கு நேரமில்லை என்றுஇருக்கின்றனர். ஒருவருக்கு நல்ல கருத்துக்களைக் கூறுவதற்குச் சிலர்தான்இருப்பார்கள். சிலர் பல்வேறு விதமான முயற்சிகளிலும் ஈடுபட்டுதோல்வியடையும்போது, “நான் மாவு விக்கப் போனா காத்தடிக்குது உப்பு விக்கப்போனால் மழை பெய்யுது?“ என்றும்சாண் ஏறுனா முழம் சருக்கதுஎன்றும் பிறரிடம் புலம்பித் தீர்ப்பர். அதனைக் கேட்கும் நண்பர், “அதற்குக்கவலைப்படாதேஎன்று கூறி, ‘‘முயற்சி திருவினையாக்கும்என்றபழமொழியையும் கூறி, “விடாமுயற்சி வெற்றி தரும்என்பதனையும்எடுத்துரைத்து ஆறுதல் கூறுவார்.

அதற்கு வந்தவர், “அட நீங்க வேற என் மனசே சரியில்லை. நான் யாரிடம்சென்று இனிமேல் உதவி கேட்பேன்?“ என்று வினவும்போது, அவரது நண்பர், “இதோ பாருங்கள், மனமிருந்தால் மார்க்கம் உண்டுநல்லா சிந்தித்துப்பாருங்கள் ஏதாவது ஒருவழி பிறக்கும்என்றும்யாரும் உதவவில்லை என்றாலும் நீங்களே முயற்சி செய்து பாருங்கள்என்று எடுத்துரைத்து, தன் கையே தனக்குதவி, அதுமட்டுமில்லை, கையை ஊன்றித்தான் கரணம் (குட்டிக்கரணம்) போடணும்என்ற பழமொழிகளையும் கூறி அவருக்கத் தன்னம்பிக்கை ஊட்டுவார்.

வந்தவர் சரி, “நான் எந்த்த் தொழிலைத் தொடங்குவது?“ என்று தனதுநண்பரிடம் கேட்கும்போது, இதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்களுக்குஎந்த்த் தொழில் நன்றாகத் தெரியுமோ அந்தத் தொழிலைச் செய்யுங்கள்என்றுகூறுவார். மேலும் இதோ பாருங்கள்,

தெரிந்த தொழிலை விட்டவணும் கெட்டான், தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்

என்று நமது பெரியோர்கள் கூறுவர். அதனால் உங்களுக்குத் தெரிந்ததொழிலையே செய்யுங்கள்என்று கூறி அவரை ஊக்கப்படுத்தி வீட்டுக்கு அனுப்புவார்.

மேற்கூறிய பழமொழிகள் வாழ்வில் தொடர் தோல்விகள் ஏற்பட்டாலும்தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையும், மனம்வைத்து சிந்தித்துப் பார்த்தால் வாழ வழி கிடைக்கும் என்பதையும், தன்முயற்சியும் தெரிந்த தொழிலை விடாது செய்யும் திறனும் வேண்டும்என்பதையும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. முயற்சி வாழ்வில்மலர்ச்சியைத் தரும் என்ற ஆக்கப்பூர்வமான சிந்தனையையும் இப்பழமொழிகள் நமக்குத் தருகின்றன.

முயற்சி செய்பவன் என்றும் தோல்வி அடைவதில்லை என்தனைஇப்புழமொழிகள் வலியுறுத்துவதுடன் என்ற அரிய வாழ்வியல் உண்மையையும் தெளிவுத்துகின்றன.

துணிவு

வாழ்வில் துணிவு என்பது அனைவருக்கும் வேண்டும். துணிவை, துணிச்சல்என்று வழக்கில் கூறுவர். “துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாதுதம்பிஎன்று திரைப்படப் பாடலொன்று கூறுகின்றது. துணிவுதான் வாழ்க்கையில் ஒருவன் முன்னேறுவதற்கு முதல் அடிப்படையாக அமைகிறது.

துணிவே துணை“,

துணிந்தவனக்குத் துக்கமில்லை“,

சாகத் துணிந்தவனுக்குச் சாகரம் முழங்கால் மட்டம்

போன்ற பழமிகள் மனிதனுக்குத் துணிவு தேவை என்று எடுத்துரைக்கின்றன. துணிவு மனதில் விமையை ஏற்றுகிறது. மனவலிமை செயலைச் செய்வதற்குஉறுதுணையாக இருக்கின்றது. இவை ஒன்றோடொன்று சேரும்போது வெற்றி என்பது ஒருவனுக்கு வாய்க்கிறது.

முயற்சி+மனவலிமை+செயல்= வெற்றி

என்ற சமன்பாட்டில் இதனை அடக்கிக் கூறலாம். முயற்சி, துணிவுமனவலிமை, செயல் ஆகியவை ஒருங்கிணைந்தால் வாழ்வில் ஒருவன் வெற்றியடையலாம். என்ற வாழ்வியல் முன்னேற்றக் கருத்தினை மேற்கண்டபழமொழிகள் நமக்கு வலியுறுத்துகின்றன.

உழைப்பு

மக்களின் வாழ்க்கையை, உலகை, உருவாக்கியதும், உருவாக்குவதும், மேம்பாட்டையச் செய்வதும் உடைப்பே ஆகும். உழைப்பவர்களுக்கே இவ்வுலகம் சொந்தமானது. உழைக்காதவர்களைச் சோம்பேறிகள் என்றுகூறுவர். உழைப்பை வலியுறுத்தி பல பழமொழிகள் நம் தமிழக்தில் வழங்கயப்பட்டு வருவது நோக்கத்தக்கது.

பத்துவிரல்ல பாடுபட்டு அஞ்சு விரல்ல அள்ளித் தின்ன வேண்டும்

என்ற பழமொழி எழைப்பின் தன்மையைக் கூறி,உழைத்தால் மட்டுமே உலகில் உணவு கிடைக்கும், சுயமாக உழைத்து அதில் கிடைக்கும் வருவாயில்உண்டால் மிகுந்த மகிழ்ச்சியடையலாம் என்பன போன்ற கருத்துக்களையும் எடுத்துரைக்கின்றது எனலாம்.

உழைக்கின்ற நேரத்தில் உழைத்தல் வேண்டம். உழைக்காதிருந்தால் வாழ்வில் வெறுமையே மிஞ்சும். இதனை,

உழுகின்ற நேரத்தில் ஊருக்குப் போயிட்டு அறுக்கிற நேரத்தில் அரிவாளுடன் வந்த கதைதான்

என்ற பழமொழி அறிவுறுத்துகின்றது. அனைவரும் உழைக்கும்போது நாமும் உழைத்தல் வேண்டும் என்ற வாழ்வியல் முன்னேற்றக் கருத்தை இப்பழமொழி உள்ளடக்கமாகக் கொண்டமைந்துள்ளது.

சோம்பல் கூடாது

சோம்பல் வறுமையைக் கொடுக்கும், வாழ்வைக் கெடுக்கும், வளர்ச்சியைத்தடுக்கும். ஔவையாரும், “சோம்பித்திரிவர் தேம்பித் திரிவர்என்றுகுறிப்பிடுகின்றார். உழைக்காமல் இருந்தால் வாழ்வானது தேங்கிக் கிடக்கின்றசாக்கடையாக மாறிவிடும். உடைத்தால் வாழ்வு ஆறு போன்று விரியும். சோம்பலுடன் இருத்தல் கூடாது என்பதனை,

இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை

என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. இளமைக்காலமே உடைப்பதற்குரியஏற்ற காலம். பின்னர் உழைக்கலாம் என்று ஒத்திப் போட்டால் அது வயது ஏறிமுதுமையடைந்த பின்னர் வறுமையில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால் தான் நமது பெரியோர்கள் இளமையில் சோம்பேறியாக இருத்தல்கூடாது. அது பின்னாளில் வறுமையென்ற துயரைத் தரும் என்றுபழமொழியில் புகுத்தி எடுத்துரைத்தனர்.

கல்வி

முயற்சி, உழைப்பு, சோம்பலின்மை இவற்றுடன் கல்வியும் ஒருவனிடம்இருப்பின் அவனது வாழ்வு வளம்பெறும். கல்வி மனிதனைமனிதாக்குகின்றது. கல்லாமல் இருப்பது வாழ்க்கையை நரகத்திற்குஉள்ளாக்கும். ஒருவனுக்கு உண்மையான சொத்து கல்வியே. கல்வி ஒருவனைக் காலமெல்லாம் கலங்காது காப்பாற்றும் இன்பப் பூங்காவாகும்.. இத்தகைய அருமை வாய்ந்த கல்வியை இளம் வயதில் கற்றுத் தேரவேண்டும். அவ்விளம் வயதே கற்கும் பக்குவமான பருவமாகும். இதனை அறிந்தே நமதுமுன்னோர்,

இளமையில் கல்

என்று முன்மொழிந்துள்ளனர். இளமையில் என்னால் கல்வி கற்க முடியாது, நான் பெரியனாக வளர்ந்தபின் படிக்கின்றேன் என்று கூறி ஒருவன் கல்விகற்காமலிருந்துவிட்டால் வயதானபோது வாழ்வில் அவன் துன்புறநேரும். வயதானபோது படிக்க்க் கருதினால் அவனுக்கு உடலும், மனமும், சூழலும் ஒத்துழைக்காது. அதனால்தான் நமது முன்னோர்கள்,

ஐந்தில் வளையாத்துஐம்பதில் வளையும்?“

என்ற பழமொழியினைக் கூறி கல்வியனைக் கற்பதற்கு வலியுறுத்தினர்எனலாம்.

காலமறிதல்

அந்தந்தக் காலத்தில் நாம் செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்ய வேண்டும். காலம் அறிந்து செயல்படாதிருப்பின் அது கையாலாகாத்தனத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இதனைஅறிந்தே நமது முன்னோர்கள்,

பருவத்தே பயிர்செய்

என்று கூறினர். இளம்பருவத்திலேயே பயில வேண்டியதைப் பயின்றுவாழ்வை வளமாக்கிக் கொள்ள வேண்மு. மேலும் காலம் போனால் வராது. உயிர் போன்றது. உயிர் போனால் எங்ஙனம் வராதோ அதுபோல் உரிய காலம்போனால் மீள அது வராது. இதனை,

காலம் பொன் போன்றது, கடமை கண்போன்றது

என்று நமது முன்னோர் கூறி வைத்தனர்.

இளம் வயதிலேயே ஓடி ஆடி உழைத்து வாழ்விற்கு வேண்டியதைச் சேர்த்துவைத்துக் கொள்ள வேண்டும். அது வறுமையிலிருந்து ஒருவனைக்காப்பாற்றும். அவ்வாறின்றி ஒருவன் வாழ்ந்தால் அவனது வாழ்வு தீயின்முன்வைத்த வைக்கோல் போர் போன்றுஅழிந்துவிடும். இத்தகைய அரியதன்முன்னேற்றக் கருத்தினை, காலத்தை வீணாக்காது இருக்க வேண்டியஅரிய செய்தியினை, காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழிதெளிவுறுத்துகின்றது. காற்று-வாய்ப்பு, தூற்றுதல்-பயன்படுத்திக் கொள்ளல். வாய்ப்புகள் வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில்முன்னேற வேண்டும் என்ற அரிய சிந்தனையை இப்பழமொழி எடுத்துரைத்துஅனைவருக்கும் வாழ வழிகாட்டுகின்றது.

பழமொழிகள் பண்பாட்டுப் பெட்டகங்கள். வாழ்வை வளமாக்கும் வாழ்வியற்களஞ்சியங்கள். அத்தகைய முன்னோர் மொழிந்துள்ள அருஞ்செல்வத்தைநாம் போற்றிக் காப்பதோடு அவை கூறும் வழியில் நல்வாழ்வு வாழ்ந்துவாழ்க்கையை வளமாக்கிக் கொள்வதும் நமது கடமையாகும்.

நன்றி

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.