Sunday, February 13, 2011

மனிதன் தோன்றிய இடம் குமரிக் கண்டமே...

மனிதன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே பாவாணரின் கருத்தை புதிய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன!

மனித குலம் முதன் முதலாக ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் தோன்றியது; அங்கிருந்துதான் உலகமெங்கும் பரவியது என மானிடஇயல் அறிஞர்கள் இதுவரை கூறிவந்தனர்.

ஆனால் லெபனான் நாட்டில் டர்-அட்-டலா என்னுமிடத்தில் மனிதர்கள், மனிதக்குரங்குகள் ஆகியவற்றின் புதைஉயிர்த் தடங்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஆராய்ந்த மானிடஇயல் அறிஞர்கள் 390 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை இவை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

மனித குலத்தின் தோற்றம் வளர்ச்சி ஆகியவை குறித்து மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். மனித இனம் ஆப்பிரிக்காவில்தான் முதல் முதலாக வாழ்ந்தது. இங்கு 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் புதைஉயிர்த் தடங்கள் இங்கு கிடைத்துள்ளன. இங்கிருந்துதான் மனித குலம் ஐரோப்பாவுக்கும் ஆசியாவிற்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பரவியிருக்க வேண்டும். மனித குலத்தின் இந்த இடப்பெயர்ச்சி சுமார் 5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியிருக்க வேண்டும்.

இங்ஙனம் ஆப்பிரிக்காவில் கிடைத்த மனிதர்களின் புதைஉயிர் தடங்களின் அடிப்படையில் 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு மனிதர்கள் தோன்றி உலகெங்கும் பரவியிருக்க வேண்டும் என மானிட இயல் ஆய்வாளர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் இப்போது லெபனானில் அதற்கு 360 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மனித இனம் வாழ்ந்திருக்கிறது என்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. ஆக மனிதன் ஆசியாவிலிருந்துதான் உலகெங்கும் பரவியுள்ளான் என்பது உறுதியாகியுள்ளது.

பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட ஊழிக்காலத்தில் இந்துமாக்கடலில் உள்ள பெரிய நிலப்பரப்பு மூழ்கி மறைந்தது. இக்கண்டத்தில் வாழ்ந்து மறைந்த குரங்கினமே மனித இனமாக பின்னர் உருவெடுத்தது என்ற கருத்தை பிரடெரிக் ஏங்கெல்சு கூறியுள்ளார். இது குறித்து மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் எழுதியுள்ள தமிழர் வரலாறு என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

''மாந்த இனங்களின் கொடிவழியும் பொதுப்படையுமான இடமாற்றங்களும் பற்றிய கருதுகோள் : ''மாந்தனின் முந்தியல் இருப்பிடம் இன்று இந்துமாவாரியில் மூழ்கியுள்ள ஒரு கண்டம் என்றும், அது இன்றுள்ளபடி ஆசியாவின் தென்கரையை நெடுகிலும் அடுத்து (பெரும்பாலும் இருந்திருக்க கூடியபடி) அதனோடு சிலவிடங்களில் இணைந்தும், கிழக்கில் (என்ழ்ற்ட்ங்ழ் ஒய்க்ண்ஹ) அப்பாலை இந்தியாவும் சண்டாத் தீவுகள் வரையும், பரவியிருந்ததென்றும் கருதுவிக்கும் பல சூழ்நிலைகள் (சிறப்பாகக் காலக் கணக்கியல் உண்மைகள்) உள்ளன. விலங்குகளும் நிலைத் திணையும் பற்றிய பல ஞால நூலுண்மைகள் அத்தகைய தென்னிந்தியக் கண்டமொன்று முன்னிருத்த தென்பதைப் பெரிதும் காட்டுகின்றன. அக் கண்டத்திற்குச் சிறப்பாக உரியனவாயிருந்த முந்தியற் பாலுண்ணிகளால், அது இலெமூரியா எனப்பெயர் பெற்றது. அதை முதற்கால மாந்தனின் உறைவிடமாகக் கொள்வோமாயின், மாந்த இனங்கள் இடம்பெயர்ந்து ஆங்காங்கும் குடியேறியிருக்கும் திணையியற் பாதீடு எளிதாய் விளங்கிவிடும்.

''மாந்த இனவாராய்ச்சி, வடபாகத்திலும் நண்ணிலக் கடற்கரையிலும் இன்றுவாழும் மாந்த இனங்களின் முன்னோர், தென்னிந்தியா வழியாகத்தான் அவ்விடங்கட்குச் சென்றிருந்தனர் என்பது எவ்வகையிலும் கீழ்க்கரையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக்குக் கூடுகட்கும் அடையாளங்கட்கும், உரியகாலம், இன்னதென்று தீர்மானிக்கப்படாததாயிருப்பினும், பொதுவாகக் கணிக்கப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்டதாகும்''. (தமிழர் வரலாறு-முதல்பாகம், தேவநேயப் பாவாணர் (பக்கம்5-6).

கடலூள் மூழ்கி மறைந்த குமரிக்கண்டத்தில்தான் மாந்த இனம் முதன்முதலாகத் தோன்றி அங்கிருந்து இந்தியா முழுவதும் பரவி சிந்து சமவெளியில் நாகரிகத்தைத் தோற்றுவித்து அதற்குப்பின் மேற்கு நோக்கி அது பரவியுள்ளது என்பதற்கான அடையாளம்தான் லெபனானில் கிடைத்துள்ள புதைஉயிர்த் தடங்கள் ஆகும்.

தேவநேயப் பாவாணர் இக்கருத்தை முதன்முதலாகக் கூறியபோது அதை எள்ளி நகையாடியவர்கள் உண்டு. ஆனால் இப்போது மானிடவியல் ஆய்வாளர்கள் விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களின் மூலம் பாவாணரின் கருத்து உண்மைதான் என்பதை நிலைநாட்டியிருக்கிறார்கள்.


---

நன்றி

இளங்குமரன் தா

No comments: