Sunday, February 13, 2011

தமிழ் மருத்துவம் --- சித்த மருத்துவம்

சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாக கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்து கூற இயலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.

இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைத் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய், சீனி, முதலியக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஓர் மருத்துவ முறையாகும்.

சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மெஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் த்ததுவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்ற ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும். சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்கள் சான்றுள்ளது.

சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய
சரநூல் மார்க்கம்
கோதறு வகார வித்தை
குருமுனி ஓது பாடல்
தீதிலாக் கக்கிடங்கள்
செப்பிய கன்ம காண்டம்
ஈதெலாம் கற்றுணர்ந் தோர்
இவர்களே வைத்தியராவர்.....
(--
சித்தர் நாடி நூல் 18 --)

சித்தர்கள் மனித சரீரத்தை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள். சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்க காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்), இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சைதாது, சுக்கிலதாது, மலம், மூத்திரம் என்னும் பனிரெண்டும் நாம் உண்ணும் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு, பலத்தையும் இயக்கத்தையும் கொடுக்கிறது. நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதினாலும் பிணிகள் உற்பத்தி ஆகின்றன.

நம் உடலில் காற்று, வெப்பம், நீர் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் குறைவுபட்டாலும், அதிகமானாலும் நோய் தோன்ற காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும்.


வாத சம்பந்த பிணிகள்

வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.

கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தில் பெரும்பாலும் வாதம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

பித்த சம்பந்த பிணிகள்

பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும். வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் பெரும்பாலும் பித்தம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

சிலேத்தும சம்பந்த பிணிகள்

சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.

நோய்களைத் தவிர்க்கும் முறை பற்றிய திருக்குறளைப் பார்ப்போம்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.- திருவள்ளுவர்.

நோய் விளைவிக்காதவை என்று கூறப்பட்டவைகளை மட்டும் உண்டு வந்தால் மருந்து என்று எதுவும் தேவையில்லை.

பரிசோதனை

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்களாகும். உங்கள் உடலில் நோய் அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும் பரிசோதனை முறை வருமாறு. காலையிலேயே சிறு நீரை கண்ணாடி பாத்திரத்தில் எடுங்கள். அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விடுங்கள். அதன் பின் அது எப்படி செயற்படுகிறது என்று கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் உள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது. மேலும் எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் காலதாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ, அல்லது அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது.

தமிழ் எண் குறிகள்

தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.

0 1 2 3 4 5 6 7 8 9 10 100 1000

மனிதன் தோன்றிய இடம் குமரிக் கண்டமே...

மனிதன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே பாவாணரின் கருத்தை புதிய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன!

மனித குலம் முதன் முதலாக ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் தோன்றியது; அங்கிருந்துதான் உலகமெங்கும் பரவியது என மானிடஇயல் அறிஞர்கள் இதுவரை கூறிவந்தனர்.

ஆனால் லெபனான் நாட்டில் டர்-அட்-டலா என்னுமிடத்தில் மனிதர்கள், மனிதக்குரங்குகள் ஆகியவற்றின் புதைஉயிர்த் தடங்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஆராய்ந்த மானிடஇயல் அறிஞர்கள் 390 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை இவை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

மனித குலத்தின் தோற்றம் வளர்ச்சி ஆகியவை குறித்து மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். மனித இனம் ஆப்பிரிக்காவில்தான் முதல் முதலாக வாழ்ந்தது. இங்கு 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் புதைஉயிர்த் தடங்கள் இங்கு கிடைத்துள்ளன. இங்கிருந்துதான் மனித குலம் ஐரோப்பாவுக்கும் ஆசியாவிற்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பரவியிருக்க வேண்டும். மனித குலத்தின் இந்த இடப்பெயர்ச்சி சுமார் 5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியிருக்க வேண்டும்.

இங்ஙனம் ஆப்பிரிக்காவில் கிடைத்த மனிதர்களின் புதைஉயிர் தடங்களின் அடிப்படையில் 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு மனிதர்கள் தோன்றி உலகெங்கும் பரவியிருக்க வேண்டும் என மானிட இயல் ஆய்வாளர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் இப்போது லெபனானில் அதற்கு 360 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மனித இனம் வாழ்ந்திருக்கிறது என்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. ஆக மனிதன் ஆசியாவிலிருந்துதான் உலகெங்கும் பரவியுள்ளான் என்பது உறுதியாகியுள்ளது.

பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட ஊழிக்காலத்தில் இந்துமாக்கடலில் உள்ள பெரிய நிலப்பரப்பு மூழ்கி மறைந்தது. இக்கண்டத்தில் வாழ்ந்து மறைந்த குரங்கினமே மனித இனமாக பின்னர் உருவெடுத்தது என்ற கருத்தை பிரடெரிக் ஏங்கெல்சு கூறியுள்ளார். இது குறித்து மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் எழுதியுள்ள தமிழர் வரலாறு என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

''மாந்த இனங்களின் கொடிவழியும் பொதுப்படையுமான இடமாற்றங்களும் பற்றிய கருதுகோள் : ''மாந்தனின் முந்தியல் இருப்பிடம் இன்று இந்துமாவாரியில் மூழ்கியுள்ள ஒரு கண்டம் என்றும், அது இன்றுள்ளபடி ஆசியாவின் தென்கரையை நெடுகிலும் அடுத்து (பெரும்பாலும் இருந்திருக்க கூடியபடி) அதனோடு சிலவிடங்களில் இணைந்தும், கிழக்கில் (என்ழ்ற்ட்ங்ழ் ஒய்க்ண்ஹ) அப்பாலை இந்தியாவும் சண்டாத் தீவுகள் வரையும், பரவியிருந்ததென்றும் கருதுவிக்கும் பல சூழ்நிலைகள் (சிறப்பாகக் காலக் கணக்கியல் உண்மைகள்) உள்ளன. விலங்குகளும் நிலைத் திணையும் பற்றிய பல ஞால நூலுண்மைகள் அத்தகைய தென்னிந்தியக் கண்டமொன்று முன்னிருத்த தென்பதைப் பெரிதும் காட்டுகின்றன. அக் கண்டத்திற்குச் சிறப்பாக உரியனவாயிருந்த முந்தியற் பாலுண்ணிகளால், அது இலெமூரியா எனப்பெயர் பெற்றது. அதை முதற்கால மாந்தனின் உறைவிடமாகக் கொள்வோமாயின், மாந்த இனங்கள் இடம்பெயர்ந்து ஆங்காங்கும் குடியேறியிருக்கும் திணையியற் பாதீடு எளிதாய் விளங்கிவிடும்.

''மாந்த இனவாராய்ச்சி, வடபாகத்திலும் நண்ணிலக் கடற்கரையிலும் இன்றுவாழும் மாந்த இனங்களின் முன்னோர், தென்னிந்தியா வழியாகத்தான் அவ்விடங்கட்குச் சென்றிருந்தனர் என்பது எவ்வகையிலும் கீழ்க்கரையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக்குக் கூடுகட்கும் அடையாளங்கட்கும், உரியகாலம், இன்னதென்று தீர்மானிக்கப்படாததாயிருப்பினும், பொதுவாகக் கணிக்கப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்டதாகும்''. (தமிழர் வரலாறு-முதல்பாகம், தேவநேயப் பாவாணர் (பக்கம்5-6).

கடலூள் மூழ்கி மறைந்த குமரிக்கண்டத்தில்தான் மாந்த இனம் முதன்முதலாகத் தோன்றி அங்கிருந்து இந்தியா முழுவதும் பரவி சிந்து சமவெளியில் நாகரிகத்தைத் தோற்றுவித்து அதற்குப்பின் மேற்கு நோக்கி அது பரவியுள்ளது என்பதற்கான அடையாளம்தான் லெபனானில் கிடைத்துள்ள புதைஉயிர்த் தடங்கள் ஆகும்.

தேவநேயப் பாவாணர் இக்கருத்தை முதன்முதலாகக் கூறியபோது அதை எள்ளி நகையாடியவர்கள் உண்டு. ஆனால் இப்போது மானிடவியல் ஆய்வாளர்கள் விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களின் மூலம் பாவாணரின் கருத்து உண்மைதான் என்பதை நிலைநாட்டியிருக்கிறார்கள்.


---

நன்றி

இளங்குமரன் தா